Monday, October 19, 2015

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

morph
முன்பு ஒர் காலத்தில் அனைவர் ‘கையில் தழுவி, தரையில் நழுவி’ வந்த கருவி தான் நோக்கியா. சாதாரண மொபைல் போன் என்பதை விட அனைவரையும் கவர்ந்த நிறுவனம் நோக்கியா என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.
சில காரணங்களால் சந்தையில் இருந்து விலகி இருந்த நோக்கியா நிறுவனம், அடுத்த ஆண்டு சந்தையில் அதிரடியாக களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் நோக்கியா மார்ஃப் கான்செப்ட் கருவியின் ‘மர்மங்களை’ உடைக்கும்
  • நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எதிர்கால தொலைதாடர்பு சாதனம் தான் நோக்கியா மார்ஃப்.
  • மார்ஃப் தொழில்நுட்பம் எதிர்கால கருவிகள் நீட்டிப்பு, வளைவு, தானாக சுத்தம் செய்வது மற்றும் ட்ரான்ஸ்பேரன்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
  • அறிவியல் புனைகதைகளை உண்மையாக்கும் நோக்கில் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஆராய்ச்சி மையம் மார்ஃப் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.
  • நானோ தொழில்நுட்பமானது பல வித சென்சார்களை கொண்டு கருவியில் பல புதிய சிறப்பம்சங்களை வழங்குவதோடு முழுமையாக நானோஸ்கேல் எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்துகின்றது, இது மனித கண்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • நானோஸ்கேல் அமைப்பானது இந்த கருவியை நீட்சி செய்ய வைக்கின்றது.
  • எலாஸ்டோமெட்ரிக் மூலக்கூறுகளை உருவாக்கி வரும் நோக்கியா, இதை பயன்படுத்தி பல்வேறு திசைகளில் கருவியை நீட்சி செய்ய வைக்க முடியும் என்கின்றது.
  • இந்த ஸ்மார்ட்போனினை வளைத்து கையில் அணிந்து கொள்ளவும் முடியும்.
  • இந்த கருவியின் பட்டன்கள் அனைத்தும் உண்மையான 3டி வடிவில் இருக்கின்றது.
  • தற்சமயம் ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த கருவியின் வெளியீடு குறித்து எவ்வித தகவல்களும் இல்லை, மேலும் இந்த கருவி கான்செப்ட் என்பதால் இவை வெளியாகாமலும் போகலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval