Wednesday, October 28, 2015

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம்: மார்க் ஜுகர்பெர்க்

mark-zuckerberg-taj-mahal1
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் ஜுகர்பெர்க் மாணவர்கள் முன் பேசும்பொழுது, கோடிக்கணக்கான மக்களை கொண்ட இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முக்கியத்தவம் பெற்றது என்றும் அது வறுமையை போக்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப அமைப்பில் (ஐ.ஐ.டி.) திரண்டிருந்த 900 மாணவர்கள் முன் பேசிய அவர், ஆன்லைன் பயன்பாட்டில் இல்லாத கோடிக்கணக்கான மக்களை கொண்ட ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். அவர் கிரே நிற டி சர்ட் மற்றும் அடர்நிற ஜீன்ஸ் அணிந்து பேசும்பொழுது, உலகில் ஒவ்வொரு நபரையும் இணைக்கும் திட்டத்தை உண்மையில் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் இந்தியாவில் உள்ள மக்களை இணைக்காமல் நீங்கள் அதனை செய்ய முடியாது என கூறியுள்ளார்.
நாங்கள் 2வது மிக பெரிய அளவிலான சமூகத்தை இந்தியாவில் கொண்டுள்ளோம். கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் பயன்பாட்டில் ஈடுபட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறிய அவர், இன்டர்நெட் பயன்பாடு பணிகளை உருவாக்குவதுடன் மக்களை வறுமையில் இருந்து வெளி கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார். உலகம் முழுவதும் 150 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் 13 கோடி பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் உள்ளனர். சீனாவில் பேஸ்புக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரிடம், நான் ஏன் கேண்டி கிரஷ் (ஆன்லைன் விளையாட்டு) என்ற விளையாட்டிற்காக அதிக கோரிக்கைகளை பெறுகிறேன்? மற்றும் உங்களுக்கு சூப்பர்நேச்சுரல் பவர் கிடைக்க நேரிட்டால் உங்களது விருப்பம் என்னவாக இருக்கும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு 31 வயது நிறைந்த கோடீசுவரரான ஜுகர்பெர்க் எளிய முறையில் பதிலளித்துள்ளார்.
ஆனால், இன்டர்நெட் பயன்பாட்டை இலவச முறையில் பெற்றிட உதவும் பேஸ்புக்கின் சர்ச்சைக்குரிய இன்டர்நெட்.ஓஆர்ஜி என்ற திட்டம் தேவை என்பதை தீவிரமுடன் வலியுறுத்தினார். இந்தியா உள்பட 24 நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற சமூகத்தினருக்கு இன்டர்நெட் சேவையை இலவச முறையில் இது வழங்குகிறது.
இன்டர்நெட்.ஓஆர்ஜி சமச்சீரான வலை பயன்பாட்டை மீறுகிறது என்ற சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அந்த வகையில், இன்டர்நெட் பயன்பாட்டை அளிக்கும் நிறுவனங்கள், சில வலைதளங்களை கொண்டிருப்பதில்லை அல்லது பிற வலைதளங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டுள்ளது என விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவர் பேசும்பொழுது, இன்டர்நெட் வசதி இல்லாத மக்களை கண்டறியும் மேன்மைமிகு பொறுப்பு நம்மிடம் உள்ளது. இன்டர்நெட் வாய்ப்பு பெற இயலாதவர்களை பாதிக்கும் வகையில் கடுமையான விதிகள் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் ஆனது, சென்று சேர்வதற்கு கடினம் நிறைந்த பகுதிகளிலும் இன்டர்நெட் சேவையை பெறும் புதிய வழிமுறைகளை கொண்டுள்ளது. இன்டர்நெட் இணைப்பை பெறுவதற்கு ஏற்ற சூரிய ஆற்றல் கொண்ட தளங்களையும் மற்றும் 2ஜி இணைப்புகள் மிக மெதுவாக இயங்கும் பகுதிகளில் டேட்டா லைட் அப்ளிகேசன் உதவியுடன் பணியாற்றுவது போன்ற வழிமுறைகள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பீஜிங் நகரில் உள்ள சிங்குவா பல்கலை கழகத்திற்கு அவர் சுற்று பயணம் செய்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் இருந்து கற்று வரும் சீனாவின் மாண்டரின் மொழியில் அவர் 20 நிமிடங்கள் உரையாற்றினார். சமூக வலைதளத்தின் அரசியல் அதிகாரம் குறித்து கண்டறியும் வகையில் சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த மாதம் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியை ஜுகர்பெர்க் வரவேற்று சந்தித்து பேசினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval