Wednesday, October 7, 2015

போக்குவரத்து வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி: தமிழக அரசு அதிரடி உத்தரவு

08_buses_1077483f
அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் வேக கட்டுபாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனத்தில் கட்டாயம் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதர வாகனங்களில் இந்த வேக கட்டுபாடு கருவி அமலில் இல்லை. இதனால் நாள் தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகள் ஏற்படுகின்றன. இதையடுத்து அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுபாடு கருவியை பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது.
அதே போல் தமிழக அரசும் வேக கட்டுபாடு கருவியை வாகனங்களில் பொருத்துவது கட்டாயம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அக்டோபர் 1ம் தேதி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 2015 அக்டோபர் 1ம் தேதியும் அதற்கு பிறகு தயாரிக்கப்படும் பேருந்துகள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களில் தயாரிப்பு நிலையிலோ அல்லது விற்பனை நிலையிலோ 80 கி.மீட்டருக்கு மேல் இயக்கமுடியாத வகையில் வேகக்கட்டுபாடு கருவி பொருத்தப்பட வேண்டும்.
இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 பயணிகள் வரை அமரும் வகையில் உள்ள வாகனங்கள் ( 3,500 கிலோ மிகாமல்) தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனங்கள் ஆகியவற்றுக்கு இந்த வேக கட்டுபாடு கருவி தேவையில்லை. பள்ளி வாகனங்கள், குப்பை வாகனம், கழிவு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம், டேங்கர் லாரிகள் ஆகியவற்றில் 60 கி.மீட்டர் வரை வேக கட்டுபாடு கருவி பொருத்த வேண்டும்.
அக்டோபர் 1க்கு பிறகு பதிவு செய்யக்கூடிய அனைத்து வாகனங்களிலும் இந்த வேக கட்டுபாடு கருவி பொருத்த பட வேண்டும். அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இந்த வேககட்டுபாடு கருவியை அந்தந்த வாகன உரிமையாளர்களோ அதை பயன்படுத்துபவர்களோ பொருத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval