Saturday, October 17, 2015

இந்திய ஜனாதிபதியின் பாலஸ்தீன் பயணத்தில் இஸ்ரேல் அராஜகம்..!!



இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாலஸ்தீன் பல்கலை கழகத்துக்குப் பரிசாக கொடுக்க இருந்த கணினி சாதனங்களைக் கொண்டு செல்ல விடாமல் இஸ்ரேல் அராஜகம் செய்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அராஜக செயலுக்கு சர்வதேச நாடுகளில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்த அவர், பாலஸ்தீனத்துக்குச் சென்றார். அங்கு ரமல்லா நகரில் உள்ள அல்–குத்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அங்குள்ள இந்திய–பாலஸ்தீன் மையத்துக்கு கணினி சாதனங்களைப் பரிசாக கொடுக்க இருந்தார்.
பாலஸ்தீனத்துக்குள் எந்த ஒரு பொருள் செல்ல வேண்டுமென்றாலும் அது இஸ்ரேல் வழியாகவே செல்ல வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதி வழங்க இருந்த 30 கணினிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இஸ்ரேலின் விமானநிலையத்தை வந்தடைந்தன.
இவற்றைப் பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்க முடியாது என விமானநிலைய அதிகாரிகள் தடுத்து வைத்துவிட்டனர்.
பிரணாப் பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு இஸ்ரேல் செல்லவிருந்த நிலையில், இஸ்ரேலின் இந்த அராஜக நிலைப்பாட்டினால் ஜனாதிபதி பிரணாப் அதிருப்தி அடைந்துள்ளார்.
முன்னர் பாலஸ்தீனத்திலுள்ள அல்-அக்ஸா மசூதிக்குச் செல்ல ஜனாதிபதி விரும்பியதையும் இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து தடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டின் ஜனாதிபதியிடமே இஸ்ரேல் காட்டும் இந்த அராஜக நடவடிக்கை, பாலஸ்தீன நாட்டினுள் அது என்னவெல்லாம் அக்கிரமங்கள் அவிழ்த்து விடுகின்றன என்பதற்கு உதாரணமாக உள்ளதாக இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியாவின் அதிருப்தியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பும் வலுத்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் விளக்கம் அளிக்க முன்வந்துள்ளது.
டெல்லி இஸ்ரேலிய தூதரக செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக, இஸ்ரேல் நாட்டு சட்ட விதிகளுக்கு உட்படாத எந்த பொருளும் அங்கு அனுமதிக்கப்படாது.
இந்தியாவில், சாட்டிலைட் போன் நுழைய இந்திய சட்டம் அனுமதிக்காது. அதுபோலத்தான் இதுவும். இதுபற்றி இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்களுக்கும் தெரியும்.
இந்த பிரச்சினையில், சில தவறான புரிந்து கொள்ளல்கள் நடந்து விட்டன என்று விளக்கமளித்துள்ளார்.
இதிலிருந்து பாலஸ்தீனத்தினுள் தகவல் தொடர்பு சாதனங்கள் செல்ல இஸ்ரேல் அனுமதிப்பதில்லை என்பதும் தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில், வளைகுடா நாடுகளின் இடையே ஒருநாட்டைச் சர்வதேச தொடர்புகளுக்குள் செல்ல விடமால் இஸ்ரேல் அராஜகமாக தடுத்து வைத்துள்ளதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
courtesy facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval