ரயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, ரயில் பயணத்தின்போது ஒதுக்கீட்டு முறையில் அளிக்கப்படும் கீழ்படுக்கை வசதி இருக்கைகளின் எண்ணிக்கை 2இல் இருந்து 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த எண்ணிக்கை அதிகரிப்பானது, மூன்றடுக்கு, இரண்டடுக்கு குளிர்சாதன வசதிகள் (ஏ.சி. த்ரி டயர், ஏ.சி. டூ டையர்) கொண்ட பெட்டிகளில் பொருந்தாது.
முன்னதாக, தூங்கும் வசதி கொண்ட அனைத்து ரயில்களிலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பெட்டி ஒன்றுக்கு, தலா 2 கீழ்படுக்கை வசதி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் முறை கடந்த 2007ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், வயதான கணவன், மனைவி ஆகிய இருவரும் மேற்கண்ட சலுகையை கேட்கும்பட்சத்தில் அந்த சலுகை மறுக்கப்படுவதாக ரயில்வேக்கு புகார் வந்தது. இதேபோல், கர்ப்பிணி பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் அல்லாமல் தனித்து பயணிக்கும்போது மட்டுமே, மேற்கண்ட சலுகை வழங்கப்படுவதாகவும் ரயில்வேக்கு குற்றச்சாட்டு வந்தது. இதையடுத்து, அந்த குற்றச்சாட்டுக்கு தீர்வு காணும் வகையில், ஒதுக்கீட்டு முறையில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் இருக்கைகளின் எண்ணிக்கையை ரயில்வே அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval