உலகிலேயே மிகக் குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தவர். கணிதத் துறையில் இமாலய சாதனைகளை நிகழ்த்திய மாமேதை பில்கேட்ஸ். அவருக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். லட்சக்கணக்கானோர் கணினி செய்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர் அதனை வாங்கி காட்சிப் பொருளாக வீட்டில் வைத்தனர். ஆனால் வாங்கிய கணினியைக் கொண்டு கணினிக்கான ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய மன்னன் பில்கேட்ஸ். கணினி உலகையே பெருமிதப் பட வைக்கும் ஜாம்பவான் பில் கேட்ஸ். உலகில் இன்று திரும்பிய திசையெல்லாம் பில்கேட்ஸ் உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த கதாநாயகன், மென்பொருள்களின் காதலன். 21-ம் நூற்றாண்டில் உலகின் மிகச் சிறந்த மனிதர்களுள் ஒருவர். இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த ஒரு முன்னோடியாகத் திகழ்பவர். இந்த நூற்றாண்டில் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர் இந்த பில்கேட்ஸ். 1955-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட மேற்கு மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்தில் பிறந்து, தனது 20-வது வயதில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்.
இவரது தந்தை வில்லியம் கெச் கேட்ஸ், ஒரு சிறந்த வழக்கறிஞர். தாய் மேரி மேக்ஸ்வெல், வாஷிங்டன் பல்கலைகழக ஆசிரியை. இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது 13-வது வயதில் லேக்சைட் பாடசாலையில் சேர்ந்தார். இவரது கணினி ஆர்வத்தையும், திறமையையும் கண்டு ஆசிரியர்கள் மெய் சிலிர்த்தனர். சிறு வயது முதலே மென் பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். பில்கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார். அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வைத்தது. கேட்ஸ்சும் அவரது நண்பர் பால் ஆலனும் கணினியின் இயங்கு தளத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்ததாகக் கூறி தினசரி சிலமணி நேரம் கணினி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இருந்த போதும் கணினியில் இருவரும் புகுந்து விளையாடி புதுமை கண்டனர்.
பள்ளி மேல் படிப்பை முடித்த பிறகு பில்கேட்ஸ் சட்டம் படித்து அவரது தந்தையைப் போலவே வழக்கரிஞராக வேண்டுமென அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினர். ஆனால் அவரது ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள் புரோகிராமிங்கை சுற்றியே வந்தன. 1974-ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ புராசசரை அறிமுகம் செய்தது. அதன் புரோகிராமிங் பணிக்கு பில்கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பாலின் உதவியை நாடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பில்கேட்ஸ் FORTRAN, COBOL,PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று BASIC புரோகிராம் எழுதத் தொடங்கினர். இதோ இன்று உலகமே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கின்றார் என்றால் மிகையாகாது.
Source: tamil.oneindia.com

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval