Thursday, October 29, 2015

யுஏஇல் முதல்முறையாக‌ பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர் திறப்பு!

Apple-retail-store
உலகின் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் யுஏல் முதல் முதல் முறையாக தனது நிறுவனத்தின் ஸ்டோரை திறந்தது.அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்,கடிகாரம் உள்ளிட்ட‌ எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாயில் மிக பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான‌ மால் ஆப் எமிரேட்சில் இன்று மாலை நான்கு மணியளவில் ஆப்பிள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் அபுதாபி யாஸ் மாலி இன்று திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொதுமக்களை ஆப்பிள் ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் திறக்கப்படும் முதல் ஸ்டோர் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval