Monday, October 19, 2015

சீத்தாப் பழத்தின் நன்மைகள்!

seetha-palam
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். உங்களுக்கு சீத்தாப் பழம் ரொம்ப பிடிக்குமா?
சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி என்று செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு பால் பொருட்கள் பிடிக்காதெனில், பாலின் மூலம் பெறும் சத்துக்களை இதன் மூலமாகப் பெறலாம். சரி, இப்போது சீத்தாப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி
உங்கள் தலைமுடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சீத்தாப்பழம் உதவும். ஏனெனில் சீத்தாப் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவை ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கிடைக்கும் போது தவறாமல் சீத்தாப்பழத்தை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான எடை
நீங்கள் எடையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இப்பழம் மிகவும் சிறப்பான ஒன்று. அதற்கு இதனை அரைத்து தேன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கருவின் வளர்ச்சி
கர்ப்பிணிகள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை வலிமையடையும். மேலும் இப்பழம் கருச்சிதைவு மற்றும் பிரசவ வலி நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.
ஆஸ்துமாவைத் தடுக்கும்
இப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இவை மூச்சுக்குழாயில் உள்ள புண்களைக் குறைக்கும். மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்ற பழம்.
மாரடைப்பு
சீத்தாப்பழத்தில் மக்னீசியம் வளமாக நிறைந்துள்ளதால், இது மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இது தசைகளை ரிலாக்ஸ் அடையவும் செய்யும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது ஹோமோசைஸ்டீன் சேகரிப்பைத் தடுத்து, இதய நோயில் இருந்து குறைக்கும்.
செரிமானத்தை அதிகரிக்கும்
சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு நல்லது. மேலும் இப்பழத்தை அடிக்கடி உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இரத்த அழுத்தம்
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்த இப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval