Thursday, October 15, 2015

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..


Thomஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தைத் தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் எனத் தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.
அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாகத் தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்குக் கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது” என்று
பல ஆண்டுகளுக்குப் பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்…..
இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாகக் கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்……
அதில் இப்படி எழுதியிருந்தது”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்” என்று……

இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் ” மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று.
தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்…..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval