Monday, February 5, 2018

அபுதாபியில் லாட்டரி குலுக்கல்: கேரளாவை சேர்ந்தவருக்கு ரூ.17 கோடியே 68 லட்சம் பரிசு

அபுதாபியில் லாட்டரி குலுக்கல்: கேரளாவை சேர்ந்தவருக்கு ரூ.17 கோடியே 68 லட்சம் பரிசு
அபுதாபியில் வசித்து வருபவர் சுனில் மப்பத்தா கிருஷ்ணன் குட்டி நாயர். இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அபுதாபியில் 500 திர்ஹாம் மதிப்பிற்கு லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார்.
இதில் நேற்று நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் இவருக்கு 1 கோடி திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 கோடியே 68 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

கேரளாவுக்கு பயணம் செய்து கொண்டு இருந்தபோது இந்த தகவல் அவருக்கு கிடைத்தது. இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த பரிசு தொகையை நான் டிக்கெட் வாங்க காரணமாக இருந்த என் நண்பர்கள் திபின்தாஸ், அபிலாஷ், சைனுதீன் மற்றும் ‌ஷம்சுதீன் ஆகியோருக்கு பிரித்து கொடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.
courtesy;Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval