Sunday, February 18, 2018

சென்னை ஆணையர் ஏகே விஸ்வனாதன் அவர்களிடம் நெகிழ்ந்த பெண் ஐடி ஊழியர் லாவண்யா


சென்னை நாவலூர் மென்பொருளில் நிருவனத்தில் பணியாற்றிய திறமையான மென்பொருள் பொறியாளர் லாவண்வாயை கொடூரமான முறையில் தாக்கி அவரிடமிருந்து ஐ போன் , 15 சவரன் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
அடையாளம் தெரியாத அளவிற்கு லாவண்யா முகத்தை சிதைத்தனர் கொள்ளையர்கள், வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்தார் லாவண்யா. அவரின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
2 நாட்களுக்கு முன்னர் முதல் முறையாக அவர் கண் விழித்து நடந்த சம்பவம் குறித்து ஒரு சில நிமிடங்கள் பேசினார். தன்னிடம் மிருகத்தை போன்று நடந்து கொண்டதாகவும் அவர்களின் குரல் எனக்கு பழக்கப்பட்ட குரல் போன்று இருந்ததாகவும் லாவண்யா அப்பொழுது தெரிவித்தார்.
இதை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட காவல் துறை லாவண்யாவிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டு அந்த 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வனாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் லாவண்யாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வனாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் லாவண்யாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அவரிடம் கனிவாக பேசி அவருக்கு ஆறுதல் கூறியதோடு மருத்துவர்களிடம் சிறந்த முறையில் அவரை கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்.
”நீங்கள் வந்தது எனக்கு தொம்ப பெருமையாக இருக்கு சார் அன்று பலரிடம் உதவி கேட்டேன்.
ஒரு போலிஸ் அதிகாரி 2 நிமிடத்தில் வந்து என்னை மீட்டார் சார் ரொம்ப நன்றி சார் என லாவண்யா ஆணையர் விஸ்வனாதன் அவர்களிடம் கூறினார்.
”நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள் , உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் , கடவுள் உங்களுக்கு உதவியுள்ளார் நீங்கள் மீண்டு வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கினறது என லாவண்யாவின் கையை பிடித்துக் கொண்டு ஆணையர் கூறிச் சென்றார்.



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval