Monday, February 26, 2018

`வெள்ளம் வேணுமா, நக்கிக் குடிடா..!’’ - காட்டுக்குள் மதுவுக்கு நேர்ந்த அவலம்

மது ஆதிவாசி இளைஞர் மரணம்கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஆதிவாசி இளைஞரான மது, 16 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவை முக்காலிக்கு அழைத்து வருவதற்கு முன், காட்டுக்குள் வைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். மதுவுக்கு நேர்ந்த கொடுமைகளை அறிவதற்கு முன், அட்டப்பாடி பகுதியைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். கோவை மாவட்டத்துக்கு மிக அருகில் உள்ள பகுதி அட்டப்பாடி. `ஆனைக்கட்டி' என்ற தமிழக எல்லையைத் தாண்டினால் `அட்டப்பாடி' வந்துவிடும். தமிழகத்துக்குள் பவானி ஆறு நுழையும் பகுதி இது. `சைலன்ட் வேலி' இங்கேதான் உள்ளது. மன்னார்காடு சற்று பெரிய நகரம். 
pic courtesy : manorama
அட்டப்பாடி, வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த பூமி; முழுவதும் இருளர், பணியர் போன்ற ஆதிவாசி மக்கள் நிறைந்த பகுதி. 175 ஆதிவாசிக் குடியிருப்புகள் உள்ளன. தமிழ்ப் பேசும் ஆதிவாசிகளும் இங்கு வசிக்கின்றனர். இந்த மக்களின் ஒட்டிய வயிறே இந்தப் பகுதி மக்களின் வறுமைக்குச் சான்று. குடித்துக் குடித்தே இறந்த மக்கள் அதிகம். அதனால், கேரளத்தில் அட்டப்பாடிக்கு மட்டும் மதுவிலக்கு அமலில் உள்ளது. யானைதான் இவர்களின் சாமி. `அந்தப் பக்கம் சாமி இருக்கும் போகாதீர்கள்' என்ற வார்த்தை இந்த பூமியைச் சேர்ந்தவர்களுக்கே சொந்தம். சொல்லப்போனால், அட்டப்பாடி பூமியும் மது போன்றோருக்குத்தான் சொந்தம்.
மது, அரிசி திருடியதாகச் சொல்லப்படுகிறது. மனநிலை பிறழ்ந்த அவருக்கும் குடும்பத்துக்கும் தொடர்பு அறுந்து 10 வருடங்கள் ஆகின்றன. காட்டுக்குள் உள்ள குகைதான் அவரின் வாழ்விடம். அரிசி காணாமல்போனதையடுத்து, காட்டுக்குள் இப்படி ஒருவர் இருப்பதாக வனத்துறையினர்தான் 16 பேர்கொண்ட கும்பலுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அந்தக் கும்பல் காட்டுக்குள் போயிருக்கிறது. மது அப்போது சமையல் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அந்தக் கும்பல் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. கொடூரத்தின் உச்சம்தான் செல்ஃபி எடுத்தது.
மதுவின்மேல் அரிசி மூட்டையையும் ஏற்றி நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு அந்தக் கும்பல் நடந்தே கூட்டி வந்துள்ளது. வறுமை காரணமாக மது பாதி நாள்கள் பட்டினியில்தான் கிடந்துள்ளார். வறியவனை வலியவர்கள் சேர்ந்து அடிக்க, உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடந்தே வந்ததும் அவரை மிகவும் சோர்வுக்குள்ளாக்கியுள்ளது. கூடவே, வனத்துறையினரின் ஜீப்பும் வந்துள்ளது. அதில், ஏற்றிக்கொண்டு வந்திருந்தால்கூட மது இறந்திருக்க மாட்டார் எனச் சொல்லப்படுகிறது. 
ஆதிவாசி இளைஞர் மது
நடந்து வரும்போது மது தாகத்தால் ``வெள்ளம்... வெள்ளம்''  எனக் கேட்டிருக்கிறார். அப்போது வனத்துறையினர் தண்ணீர் கொடுப்பதுபோல் கொடுத்து பாட்டிலைக் காட்டிவிட்டு தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இப்படி, வழியெங்கிலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தராமல் தண்ணீர் பாட்டிலைக் காட்டுவதும் தண்ணீரைக் கீழே ஊற்றுவதுமாக தாகத்துடனேயே அவரை அழைத்து வந்துள்ளனர். ``வெள்ளமாடா வேணும்... நக்கிக் குடிடா!'' என்று கூறியவாறு வனத்துறையினர் தண்ணீரைக் கீழே கொட்டியதாக அவரின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கும்பல் நடத்திய அராஜகத்தின் முடிவு, அப்பாவி இளைஞரின் பலி!
மது கொல்லப்பட்ட வழக்கில், அவரைக் கைகட்டிய நிலையில் செல்ஃபி எடுத்தவர் முக்காலியைச் சேர்ந்த உபைத் உம்மர் என்பது தெரியவந்துள்ளது. மதுவை அடிக்கும் வீடியோவை இணையத்தில் பரப்பியவரும் இவர்தான்... இந்தக் காட்சிகளைப் பார்த்து மக்கள் கொந்தளித்ததும் அதை அழிக்க முயன்றிருக்கிறார். அதற்குள் ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்திருந்தால், அவரால் அழிக்க முடியவில்லை. இவர், மன்னார்காடு எம்.எல்.ஏ சம்சுதீனின் தனி உதவியாளர் என்றும் சொல்லப்படுகிறது. இதை எம்.எல்.ஏ சம்சுதீன் மறுத்துள்ளார். 
இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. கும்பல் கடுமையாக தாக்கியதே மார்புக் கூடு இரண்டாக உடைய காரணம் எனச் சொல்லப்படுகிறது. தலையிலும் பலத்த காயம் இருந்துள்ளது. மதுவைத் தாக்கிய 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பழங்குடியினர் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று முக்காலியில் மதுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval