மத்திய பட்ஜெட்டில் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்கிற அறிவிப்பை முன்னாள் பிரதமரும், உலகின் முக்கியமான பொருளாதார அறிஞர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து கருத்துதெரிவித்த அவர், விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்ற அறிவிப்பு நடக்காத ஒன்று என விமர்சித்துள்ளார்.
வேளாண் வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் மன்மோகன் சிங், அப்படியிருக்கும் போது விவசாயிகளின் வருமான இரட்டிபாகும் என கூறுவது வெற்று வாக்குறுதி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வித்துறை நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும் எனவும் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval