திருபபுர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன் வயது 29. வயது 29 என்றாலும் பார்க்க சிறுவயது வாலிபர் போன்றுள்ளது அவரது தோற்றம். துரதிஷ்டவசமாக கடந்த 2016 ஆம் ஆண்டு தந்தையை இழந்துள்ளார்.
இந்நிலையில் மதனுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விஏஓ வின் கையெழுத்தையும் பெற்றுள்ளார் மதன்.
அரசு சான்றிதழ் வாங்குவதென்றால் சும்மாவா, அடுத்து வாரிசு சான்றிதழுக்கு வருவாய் ஆய்வாளர் கையெழுத்தும் தேவைப்பட்டுள்ளது.
இதற்காக 8 முறை வேலம்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மதன் சென்ற 8 முறையும் ஆய்வாளர் அலுவலகத்தில் இல்லை.
இன்னைக்காச்சும் எப்படியாவது வருவாய் ஆய்வாளர பார்த்து கையெழுத்து வாங்கிவிடலாம் என எண்ணிய மதன் நேற்று 8 வது முறையாக மீண்டும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் வழக்கம போல் நேற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இல்லை.
இதில் கடுப்பான மதன் , ஒரு சாக்பீசை எடுத்து அங்கிருந்த அறிவிப்பு பலகையில் ;
“வருவாய் ஆய்வாளர் அதிகாரி அவர்களே, இன்றோடு எட்டாவது நாள் உங்களை பார்க்க வருகிறேன். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை.
நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படுமே. இப்படிக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை வரியாக அளிக்கும் இந்திய குடிமகன்”
என எழுதி விட்டு கடைசியில் மதன் தனது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு சென்றுள்ளார்.
மதன் எழுதி விட்டு சென்றும் இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழியர்கள் உடனடியாக மதனின் அறிவிப்பை அழித்தனர்.
அத்தோடு வருவாய் ஆய்வாளர் 5 மணிக்கு வருவார் என பலகையில் எழுதியுள்ளனர். இந்த தகவல் வருவாய் ஆய்வாளர் காதிற்கு சென்றதும் அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் ராசு , முதல் வேலையாக மதனிற்கு போனை போட்டு வரச் சொல்லி வாரிசு சான்றிதழை வழங்கியுள்ளார்.
அலைய விட்ட அதிகாரிகயை ஒரே ஒரு துண்டு சாக்பீசில் அலற விட்ட மதனிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
மளிகை கடை நடத்தி வந்தாலும் மதன் படித்தது பிஎஸ்சி கம்யுட்டர் சயின்ஸ் என்பது குறிப்பிடதக்கது.
சுற்றியுள்ள பல பகுதிகளில் தான் ஒருவர் தான் அதிகாரியாக இருப்பதால் அடிக்கடி கள ஆய்விற்கு சென்று விடுவதாலும், அலுவலக வேலையாக பயிற்சிக்காக சென்னை சென்றதால் இவ்வாறு ஏற்பட்டு விட்டதாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மதன் கடைசியாக எழுதி வைத்துள்ள வாக்கியத்தை அனைத்து அதிகாரிகளும் மனதில் கொள்ள வேண்டும் என மதனிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval