Tuesday, February 6, 2018

கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட பெண்கள்

எர்னாகுளம் கேரளா: கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த 2 பெண் மற்றம் அவர்களது ப்ரோக்கரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர். மூனாரில் இருந்து திரும்பி வரும் வழியில் ஒரு கடையில் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து பொருள் வாங்கியுள்ளனர். கடைக்காரர் இது கள்ள நோட்டு என்பதை தெரியாமல் முதலில் பொருட்களையும் மீத தொகையையும் கொடுத்து விடுகின்றார். காரும் கிளம்பிவிட்டது
.
சிறுது நேரம் கழித்து அவருக்கு அது கள்ள நோட்டு எனத் தெரியவந்ததும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அந்த காரையும் நண்பர்களுடன் பின் தொடர்ந்துள்ளனர். தாலக்கொட் செக்போஸ்ட்டில் வைத்து காரை சோதனை செய்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ப்ரோக்கர் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
பெண்களின் ஹேண்ட் பேக்கில் சுமார் 7.50 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. உலக கள்ள நோட்டு சந்தை கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து வழக்கை NIA கையில் எடுத்துள்ளது.
இவர்களை பிடிக்க அந்த கடையில் பணியாற்றிய வாழிபர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval