Saturday, February 10, 2018

அல்-குர்ஆனின் தீர்ப்பு

Image may contain: textஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது.
ஒன்று ஆண், மற்றொன்று பெண்.
செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன.
ஆண் குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்களும் வாதிட்டார்கள்.
அங்கு பணிபுரியும் முஸ்லிம் மருத்துவரிடம் சக மருத்துவர்கள், எல்லாவற்றிருக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது என்று சொல்வாயே?? இதற்கு குர்ஆன் சொல்லும் தீர்வு என்ன? என்று கிண்டலாக கேட்டனர்.
அந்த முஸ்லிம் மருத்துவர் எகிப்தில் உள்ள அல்அஜ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்களிடம் வினவினார்.
அதற்கு அவர்கள், அந்நிஸா அத்தியாயத்தில் இதற்கான விடை இருக்கிறது ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார்கள்.
மருத்துவர் ஆராய்ந்து பார்த்த போது, உங்கள் மக்களில் ஓர் ஆணிற்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்
[அல்-குர்ஆன் 4:11]
எனும் அல்லசாஹ்வின் வாக்கிட்கு ஏற்ப இரண்டு பெண்களின் தாய்பாலின் மாதிரியை எடுத்து ஆராய்ச்சி செய்தார்
ஒரு குழந்தையை உடைய தாயின் பாலின் எடையும் கொழுப்பு சக்தியும் மற்றைய குழந்தையை உடைய தாய்ப் பாலின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை கண்டு பிடித்தார்.
அதனடிப்படையில் எந்த தாயின் பாலிலுள்ள கொழுப்பு சக்தி அதிகம் உள்ளதோ ஆண் குழந்தை அந்த தாயிற்கு உரியது என்று முடிவெடுத்தார்.
அண்மைக் கால ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன.
-
இந்த தகவளின் விஞ்ஞானக் கருத்தை நீங்கள் உருதிப்படுத்த
விரும்பினால் சர்வதேச இணையத்ததளமான www.Wikipedia.org இல் "ஆண், பெண் குகழந்தைகளின் தாய்ப்பாலுக்கு இடையிலான வித்தியாசம்" எனும் கருத்தை தேடி உருதிப்படுத்திக் கொள்ளலாம்
📝 இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்
"இறுதிநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்விருக்கிறது. ஆனால் அதை ஆராய்ந்தறியும் அறிஞர்கள் தாம் தேவை"
அல்ஹம்துளிள்ளாஹ்
அல்லாஹ்வே நன்கரிந்தவன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval