Friday, February 2, 2018

உண்ண உணவில்லாமல் ஒரு தாய் உயிரை விட்டிருப்பது??????

Image may contain: 4 people, closeup
நாடே குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டடிருந்தபோது, உத்திரபிரதேசத்தில் 15 நாள் பட்டினிக்கு பிறகு கிடைத்த 6 சப்பாத்திகளையும் தன் 3 பெண் மக்களுக்கும் பிரித்து கொடுத்துவிட்டு பெற்ற தாய் பட்டினி மரணம்.
முராதாபாத்தில் அமீர் ஜஹான் என்கிற 45 வயதுடைய பெண்மணி அவரது 3 பெண் பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்கள் .அவரது கணவர் முஹம்மது யூனுஸ் ரிக்ஷா ஓட்டி வந்தார். காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வேலை தேடி பூனா சென்றிருக்கின்றார். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த நிலையில் வீட்டில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் கடந்த 15 நாள்களாக அக்கம்பக்கத்தார் அளித்து வந்த உதவியைக் கொண்டு கால் வயிறும் அரை வயிறுமாக நாள்களை ஓட்டி வந்திருக்கிறார்கள். 15 வயதான அவரது மூத்த மகள் ரைஹானாகூறுகையில் எங்களின் தாய் மற்றவர்களைவிட மிகவும் வலிமையானவர், உறுதிமிக்கவர் அவருக்கே இன்று இந்த நிலைமை என்கிறார்
முந்தைய இரவு அவருடைய அண்டை வீட்டுக்காரப் பெண்மணி ஷபானா பேகம் 6 சப்பாத்திகளைக் கொடுத்திருக்கின்றார். அவற்றைத் தம்முடைய மூன்று மகள்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு வெறும் வயிற்றோடு படுக்கப் போய் இருக்கின்றார், அமீர் ஜஹான். அடுத்த நாள் மயங்கிக் கிடந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு மூச்சை விட்டிருக்கின்றார்.
இப்படி கிடைத்து வந்த உணவு முழுவதையும் மகள்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு பலநாள்களாக வெறும் தண்ணீர் குடித்தே வாழ்ந்து வந்திருக்கின்றார் அமீர் ஜஹான்.
டிஸ்ட்ரிக் மாஸ்ஜித்திரேட் R k சிங்க் கூறுகையில் மருத்துவமனை பிரேதபரிசோதனை அறிக்கை பொதுவெளியில் வெளியிட முடியாதென்றார் .பட்டினியால் தான் அந்த பெண்மணி உயிரிழந்தார் என்கிறது மருத்துவமனை வட்டாரம்.
நாடே குடியரசு தினக் கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது உண்ண உணவில்லாமல் ஒரு தாய் உயிரை விட்டிருப்பது அவ்வூர் மக்களை ஆளாதுயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி: அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval