Saturday, February 24, 2018

திடீர் என மின்சார கம்பியில் ஏறி 2 மணி நேரம் ஆட்டம் காட்டிய எலக்ட்ரிசியன் ஈரோட்டில் பரபரப்பு


ஐரின் என்பவர் ஆங்கிலோ இன்டியன். எலக்ட்ரிசியனாக பணியாற்றிவந்துள்ளார். மனைவியை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெங்களுரில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவி பொள்ளாச்சியில் இருந்துள்ளார். மனைவியை பார்க்க வேண்டும் என குழந்தைகள் கூறியதாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவியை பார்க்க கோவை பொள்ளாச்சிக்கு புறப்பட்டுள்ளார்.
செல்லும் வழியில் ஐரின் க்கு உடல் நலக்கு குறைவு ஏற்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் தன்னை கொலை செய்யப் போவதாக கூறி சாலையில் ஓடி வந்துள்ளார்.
இதை பார்த்த பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலிசார் அவரை பிடித்து வசாரனை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீர் என அங்கிருந்த மின்கம்பியில் ஏறி நடக்க ஆரம்பித்து விட்டார் ஐரின்.
காவல்துறை , மின்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் முன் கூட்டிய தகவல் கொடுத்ததால் அவர் ஏறும் முன்னரே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் மின் கம்பியல் ஏறிய அவர் மின்சார தாக்குதலில் இருந்து தப்பினார்.
அவரை கீழே இறங்குமாறு கூறியும் அவர் இறங்கால் அனைவருக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை போலிசார் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போலிசார் மின்துறை மற்றும் தீயணபை்பு துறையினர் உடனயாக செயல்பட்டு மின்சார இணைப்பை துண்டித்ததால் ஐரின் உயிர் தப்பினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval