Thursday, February 8, 2018

நேர்மையாக நடந்து கொண்ட மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...
Image may contain: 2 people, people standing and outdoor
நேர்மையாக நடந்து கொண்ட மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..
செவ்வாய் கிழமை நான் தென்காசிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது என்னுடன் சக பயணியாக பிராயாணம் செய்த 75 வயது மதிக்கத்தக்க அஸ்மால் பீவி அவகூறி அழுது புலம்பிக் கொண்டிருந்தார், அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினேன். பின்பு தென்காசி ரயில் நிலையத்தில் அவரை அழைத்துக் கொண்டு போருடைய பணப்பையை தவற விட்டதாகவும், அதில் ரூ.4500ம், 2 1/2 பவுன் தங்க செயினும் இருந்ததாக ய் புகார் கொடுத்தேன்.
பின்பு எனது வேலைகளை முடித்துவிட்டு மதுரை திரும்பும் போது மதுரை ரயில் நிலையத்திற்கு சென்று அந்த புகார் சம்பந்தமாக நடைமேடை ஆய்வாளரை சந்தித்து கேட்டேன், அவர் பொருள் சம்பந்தமான அடையாளங்களை அனைத்தையும் என்னிடம் விசாரித்தார்., அந்த னானி சொன்ன அடையாளங்களை சொன்னேன், அல்ஹம்துலில்லா... பொருளும், நகையும் கிடைத்து விட்டதாகவும் ஆய்வாளர் சுரேஷ் கூறினார், 
Image may contain: 1 person, indoor

அந்த பாட்டியை ஆதார் கார்டு இன்னும் சில PROOF களையும் எடுத்துக் கொண்டு நாளை அழைத்து வாருங்கள் என்றார். உடனே னானியை தொடர்பு கொண்டு அனைத்தையும் சொன்னேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தார். பின்பு புதன்கிழமை மதியம் 4 மணியளவில் மதுரை வந்து என்னை தொடர்பு கொண்டார் , உடனே நானும் ரயில் நிலையம் சென்று அவர்களை சந்தித்தேன்.. னானியுடன் அவரது மருமகன் வந்திருந்தார், இருவரையும் அழைத்துக் கொண்டு ஆய்வாளரிடம் அழைத்துச் சென்றேன், பின்பு ஆய்வாளர் ஒப்படைக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் செய்தார்., இரவு 9 மணிக்கு அனைத்து PROCEDURE களும் முடிக்கப்பட்டு , ரூ.4500/- பணத்திற்கான Voucher -ம், 2 1/2 பவுன் செயினையும் ஒப்படைத்தனர். அல்ஹம்துலில்லா. பின்பு னானி அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்தவராக ஊர் திரும்பினார்... அல்ஹம்துலில்லா..
(குறிப்பு : மதுரை ரயில் நிலைய RPF காவல் ஆய்வாளர் (நடை பாதை சோதனையின் போது பர்ஷை எடுத்து கொடுத்தவர்) , மதுரை ரயில் நிலைய நடைமேடை ஆய்வாளர் திரு.சுரேஷ், தென்காசி TRP SI திரு.ரவிச்சந்திரன் அனைவரும் நேர்மையானவர்களாக இருந்தனர்.)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval