
கட ந்த இரண்டு வாரமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது தலைநகர் சென்னையில் நடைபெற்ற ரவுடி வேட்டை. தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த சம்பவம்.இந்திய வரலாற்றில் 120 ரௌடிகளை சுற்றி வளைத்து அதில் 75 ரௌடிகளை கைது செய்தது வரலாற்றில் இது முதல்முறை.காவல்துறையில் இப்படிப்பட்ட சாதனை நிகழ முதற்காரணமாய் இருந்தவர் பள்ளிக்கரணை ஆய்வாளர் திரு. P. K. சிவகுமார் அவர்கள். சம்பவத்தன்று வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை கண்டு நிற்காமல் சென்ற இருசக்கரவாகனத்தை சினிமா பாணியில் துரத்திசென்று பிடித்தனர்.பிடிபட்ட நபரை சோதனை செய்தபோது அவனிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன தொடர்ந்து காவல்நிலையம் அழைத்துவந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில் அவன் பெயர் பல்லுமதன் என்பதும் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட மாங்காடு வெளிவட்ட சாலையில் அமைத்துள்ள மலயம்பாக்கம் கிராமத்திற்கு செல்வதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து விழா நடைபெறும் வேலு லாரி ஷெட்டிற்கு சென்று அங்கு நடைபெறுவதை உறுதி செய்த ஆய்வாளர் சிவகுமார் தனது மேல்அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்றது தான் மிகப்பெரிய ரௌடிவேட்டை.இவ்வளவு பெரியசாதனை செய்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினர் பெயரோ எந்த ஊடகத்திழும் வரவில்லை ,எந்த மேல்அதிகாரியும் இவரை அழைத்து பாராட்டாதது வேதனை. இவரது இல்லம் அருகில் உள்ள திருவான்மியூரில் அமைந்திருந்தாலும விடுதியில் தங்கி பணியாற்றி மாதத்திற்கு ஒரு முறை இல்லம் சென்று வருபவர்.குற்றஒழிப்பு நடவடிக்கையில் திறன்பட ஈடுபடும் அதிகாரி. இவரை போன்ற அதிகாரிகள் எதிர்பார்ப்பது சிறிய அளவிலான பாராட்டு ஒன்றே. நாம் அனைவரும் இவரை வாழ்த்துவோமா நண்பர்களே
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval