Friday, February 9, 2018

வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமாக உணர்கிறீர்களா!!! இதை சாப்பிட்டு பாருங்கள்.

வாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான்.
செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம் , நேரம் தவறி சாப்பிடுவது இவைகள்தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். அவ்வாறு நிலை உண்டாகும்போது போது இடத்தில் பலரும் நெளிவதுண்டு. இதனால் வயிறு பிடித்துக் கொண்டு அந்த நிமிடமாவது அவஸ்தை கொள்வார்கள். அந்த மாதிரி தர்மசங்கடங்கள் வராமல் இருக்கவும், ஜீரண உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் என்ன மாதிரியான உபயங்களை கையாளலாம் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.
பப்பாளி : வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.
மசாலா பொருட்கள் : சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம் : வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் உடனே கட்டுப்படுத்திவிடும்.
தேங்காய் : தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிவிடும். இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
பேரிக்காய் : ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
செர்ரி பழங்கள் : செர்ரிப் பழங்கள் வயிற்றுப் பாதிப்புகளை சரி செய்யும் ஆன்டி இன்ஃபளமெட்ரி பண்புகளை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் வாய்வுக் கோளாறுகள் நீங்குவதோடு சீராக அமிலம் சுரப்பதும் தூண்டப்படுகிறது. இதனால் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.
பெருங்காய நீர் : மிக எளிதான குறிப்பு இது. வாய்வு உண்டாகும் உணவுகளை சாப்பிட நேர்ந்தால் உடனடியாக வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
புதினா இலைகள் : புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
எலுமிச்சை எடுக்கலாமா? வாய்வுத் தொல்லைக்காக எலுமிச்சை பலன் அளித்தாலும் அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம என மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டுதான் எடுக்க வேண்டும். காரணம் ஹெர்பல் பொருட்கள் இயற்கையாக இருந்தாலும் அவைகள் சில பார்மஸ்யூடிகல் பண்புகளை கொண்டிருப்பதாம் நீங்கள் சாப்பிடும் மருந்துகளுடன்  வினை புரியும். ஆகவே உங்களுக்கு வேறு ஏதாவது உடல் பாதிப்புகள் இருந்தால் , மருத்துவரை அணுகி விட்டு எலுமிச்சை குறிப்புகளை எடுத்துக் கொள்வது நல்லது
Advertisements

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval