வீட்டின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகள் கடத்தப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இது முதலில் ஆரம்பித்தது கேரளாவில் தான். கேராளவில் பல வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு காவல் நிலையங்களில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும பதிவு செய்யப்பட்டது.
ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் கேரள போலிசார் கண்காணிப்பை அதிப்படுத்தினர். ஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் இதுவரை நடைபெறவில்லை.
கேரள முதலமைச்சர் கூட தனது அதிகாரப்புர்வ முகநூல் பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டினால் குழந்தைகள் கடத்தப்படும் என்ற செய்திகயில் உண்மை இல்லை, இது வரை எப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களா வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக கூறப்படுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டியதாக கூறி ஒரு பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது மட்டுமல்லாது கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் குழுந்தைகளை கடத்த முயன்று அவர்களை பொதுமக்கள் பிடித்ததாக பல காணொளிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றது.
இது குறித்து தமிழக காவல் துறை தீவிர விசாரனை செய்து பொதுமக்களின் ஐயம் மற்றும் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval