பெருகும் கருப்பு ஸ்டிக்கர் புரளி, ஜன்னலில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினால் அந்த வீட்டில் குழந்தை கடத்தப்படும் என்ற புரளி ஆதாரமற்றது - கேரள முதலமைச்சர்!
சோசியல் மீடியாவில் பரப்பப்டும் பீதி ஆதாரமற்றது. கேரள முதலமைச்சர்!
கடந்த சில நாட்களாக கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில வீடுகளின் ஜன்னல்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக 30 க்கும் மேற்பட்ட புகார்கள் கேரள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் உள்ள குழந்தைகளை கடத்தப் போகின்றார்கள். உங்கள் வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் ஜாக்கிரதை என வாட்சப் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் புரளிகள் கிளம்பியது,
இதை கேரள காவல்துறையும் , கேரள முதலமைச்சரும் மறுத்துள்ளனர். இதுவரை அப்படி சந்த சம்பவமும் நடைபெறவில்லை திருடர்கள் எந்த நேரத்திலும் அவர்களாக துப்பு கொடுக்க மாட்டார்கள் என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக புகார் வந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
சிசிடிவி கேமரா வியாபரிகள் இது போன்று பீதியை கிளப்பி சிசிடிவி கேமரா விற்பனையை அதிகரிக்க இது போன்று யுக்திகளை மறைமுகமாக செய்திருக்கலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
ஜன்னல் வாங்கும் போது உறாய்வு ஏற்படாமல் இருக்க ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம் அதை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் எனவும் கேரள காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
கேரள காவல்துறை விளக்கம் அளித்திருத்திருக்கும் நிலையில் கேரள முதலமைச்சரே தனது முகநூலில் இது புரளி என கூறியுள்ள நிலையில் கேரளாவில் நடந்த புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டில் அந்த புரளியை சிலர் பரப்பி வருகின்றனர்.
சற்று முன் வாசகர்களுக்காக சிறப்பு செய்தி!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval