Tuesday, February 27, 2018

நாகை பாஜக மாவட்ட தலைவர் நேதாஜி வீட்டுக்கு... நாகை MLA வருகை!

Image may contain: 3 people, people smiling, people standing
நாகை மாவட்ட பாஜக தலைவர் நேதாஜி அவர்களின் அழைப்பினை ஏற்று, அவரது இல்லத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார்.
அவரை, நேதாஜி அவர்களும், அவருடைய தாயாரும், அவரது மனைவியாரும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். அவர்களுக்கு காந்தியின் "சத்திய சோதனை" என்ற நூலையும், டாக்டர் KVS ஹபீப் முகம்மது எழுதிய "எங்கே அமைதி" என்ற நூலையும் MLA அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.
MLA அவர்கள் தொகுதியில் ஆற்றிவரும் பணிகளுக்கு வாழ்த்துக் கூறிய நேதாஜி அவர்கள், மாரியம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள் கோவில் குளத்தை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.
தாமரைக்குளம், அக்கரைக்குளம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் ஏப்ரலில் தொடங்க உள்ளதாகவும், அடுத்ததாக பெருமாள் கோவில் குளத்தை சீரமைத்து தருவதாகவும் MLA கூறினார்.
மேலும் கோவில்கள் தொடர்பான எந்த மனுவாக இருந்தாலும் தருமாறும், அதை துறை சார்ந்த அமைச்சர்களிடம் எடுத்துக் கூறி, தீர்வு பெற்று தருவதாகவும் MLA கூறினார்.
நேதாஜி அவர்களின் தாயார் கூறும்போது, தான் அடியக்கமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவள் என்றும், அங்கு தனக்கு முஸ்லிம் தோழிகள் உண்டு என்றும் கூறியவர், ஒரு நாள் தனது வீட்டுக்கு மதிய உணவு சாப்பிட வருமாறும் அழைப்பு கொடுத்தார். அதை MLA அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
மேலும் தொகுதியில் சமூக நல்லிணக்கம் வலுப்பெற்றிட தனது ஆதரவு என்றும் உண்டு எனவும் நேதாஜி கூறினார். மேலும் தனது உறவினர்கள் அனைவரையும் அழைத்து "இவர் நம்ம ஊர் MLA" என்று அறிமுகப்படுத்தினார்.
தகவல்:-
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
27.02.2018

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval