Thursday, February 15, 2018

முகப்பரு வராமல் இருக்க !!


வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதனை தடுக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்.முகப்பரு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.
முகப்பரு வராமல் தடுக்க உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகும் உணவையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
தலையில் எண்ணெய் அதிகாமாக தேய்க்ககூடாது. அதனால் முகத்தில் எண்ணெய் வழிந்து முகபரு ஏற்பட காரணமாகிவிடும். வெதுவெதுப்பான நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது. முகப்பருக்களை கிள்ளக்கூடாது, அதை கிள்ளினால் முகத்தில் வடு ஏற்பட்டு விடும்.
முகப்பருவுக்கு வேப்பங் கொழுந்து, வெந்தயம், கடலை மாவு, சந்தனத்தை பயன்படுத்தலாம். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பருக்கள் மீது தடவலாம். வேப்பிலை கொழுந்தை அரைத்தும் தேய்க்கலாம். கடலை மாவுடன் தயிரை கலந்து பருக்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பச்சை வெள்ளைப் பூண்டை பருக்கள் மீது தடவி வந்தாலும் பருக்கள் மறையும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகப்பருவில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
மூன்று மாதங்கள் இதை கடைப்பிடித்து வந்தால் முகப்பருக்களை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.







No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval