Thursday, February 15, 2018

காலை உணவை தவிர்த்தாலும் ! இரவு உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் !


காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது ஆகியவற்றால், இதயக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பல்கலை கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் கூறியதாவது, புகைப் பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம், உணவுக் கட்டுப்பாடு இன்மை போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளினாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 27 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். 16 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில் 1,500 ஆண்களுக்கு முதல்முறையாக இதயக் கோளாறுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது இதனால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval