Saturday, April 30, 2016

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 உயர்வு: டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94 உயர்வு:எண்ணெய் நிறுவனங்கள்

gas-pump-regulations-for-people-with-disabilities பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் lவிலையும் லிட்டருக்கு ரூ.2.94 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வர். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்குரூ.1.06 காசுகள் உயர்த்தியும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.94 உயர்த்தப்பட்டுள்ளாத எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
courtesy;0neIndia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval