NEWS 7 சேனலில் அண்ணன் பீஜே அவர்களின் பேட்டியை பார்த்தேன்...அதைப்பற்றி கருத்து சொல்லி உங்கள் நேரத்தை வீணடிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்...
இஸ்லாமியர்களாகிய நீங்கள் உங்களுக்குள் பல பிரிவாகவும் கருத்து முரண்பாடு கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்... உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.பிரிட்டானியர்கள் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர விடாமல் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தது போல இன்றைய அரசியல் வாதிகள் உங்களை ஒன்று சேர விடாமல் அதே பிரித்தாலும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறார்கள்.இதை நீங்கள் சிந்திப்பதில்லை.
நாங்கள் சிறுபான்மையினர் எங்களால் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் நினைத்தால் உங்களை விட முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
ஓட்டுரிமை உள்ளவர்களில் எழுபது சதவிகிதம் பேர் எந்த கட்சியையும் சாராத பொதுமக்கள்..வேறு வழி இல்லாமல் எதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போடுகிறோம்...மீதியிருக்கும் முப்பது சதவிகிதம் மட்டுமே எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்கள்,இதில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ் வந்தால் அந்த முப்பது சதவிகிதத்தில் நீங்கள்தான் பெரும்பான்மையினர்... பொது மக்களாகிய எங்களின் ஆதரவும் உங்களுக்குத்தான் இருக்கும்...
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இரயில் பயணத்தில் எங்கள் வீட்டு பெண்களை தனியாக அனுப்பக்கூடிய ஒரு சூழல் வரும்போது கம்பார்ட்மெண்டில் எங்கள் சாதிகாரனோ எங்க மதத்துக்காரனோ இருந்தால் எங்கள் வீட்டு பெண்கள் போய் சேரும் வரை எங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இருப்போம்.அதே ஒரு தாடி வைத்து குல்லா அணிந்த ஒரு இஸ்லாமியர் அங்கே இருந்தால் பயமின்றி எங்கள் வேலைகளைச் செய்வோம்.ஏனென்றால் மறை ஓதும் சாயிபு அந்நிய பெண்களை சகோதரிகளாக நினைப்பதும் பெண்களுக்கு ஒரு அநீதி ஏற்படுவதை பார்த்தால் தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.
இருநூறுக்கும் மேற்பட்ட துண்டுகளாக சிதறிக்கிடந்த தேசத்தை ஒன்று சேர்த்து இந்தியா என்று பெயர்வைத்ததும் இஸ்லாமிய மன்னர்கள்தான் என்பதையும் நாங்கள் அறிவோம்...இன்றளவும் வழக்கத்தில் இருக்ககூடிய வார்த்தைகள் பஞ்சாயத், வக்கீல், வாய்தா இதுபோல இன்னும் பல, இஸ்லாமிய மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட அரபி,உருது வார்த்தைகள் என்பதையும் நாங்கள் அறிவோம். சுதந்திரப்போராட்டதில் உங்களின் பெரும் பங்கு என்ன என்பதும் அது திட்டமிட்டு மறைக்கப்பட்டதும் நாங்கள் அறிவோம்...
வ உ சி ஓட்டிய கப்பலை வாங்க தனது சொத்துக்களையே கொடுத்தவர் பர்மா வைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பதையும் நாங்கள் அறிவோம்.
பொதுவாக முஸ்லிம்கள் என்றால் உணர்சிவசப்படக்கூடியவர்கள்,தீவிரவாதிகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
வெள்ளையர்கள் நமது நாட்டை அடிமைபடுத்தியிருந்த போதும் இவர்களுக்கு இதே உணர்வும் தீவிர எண்ணமும் இருந்திருக்கும் என்பதை எப்படி சிந்திக்காமல் இருந்தீர்கள்,போதாததற்கு பாக்கிஸ்தானும் அப்போது இந்தியாவாக இருந்தது.
சென்னை வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் உங்களின் செயல்பாடுகளையும்,SDPI என்ற இஸ்லாமிய அமைப்பின் அடுத்த மாநிலத்தின் வெடி விபத்தில் எந்த அரசியல் ஆதாயமும் இல்லை என்றபோதிலும் செய்த செயல்பாடுகளையும் நாங்கள் பாராமுகமாக இல்லை.
ஆதலால் முஸ்லிம்களாகிய நீங்கள் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு எல்லோரும் ஒரு குடையின் கீழ் வாருங்கள்,
எங்கள் வீட்டு பெண்களையே உங்களை நம்பி அனுப்பும்போது இந்த நாட்டை ஆள உங்களுக்கு தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை... பொது மக்களாகிய எங்களின் ஓட்டு உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.
ஏழை பெண் ஒருவர் தன் குழந்தைகளுக்கு உணவில்லாமல் தவிப்பதை பார்த்துவிட்டு தனது அரசாங்க உணவுக்கிடங்கிலிருந்து தானிய மூட்டையை தானே சுமந்து(கை காட்டினால் சேவகம் செய்ய நூற்றுக்கணக்கில் வேலையாட்கள் இருந்தபோதிலும்) செல்லும்போது உதவ வந்த மந்திரியிடம்... இந்தச்சுமையை நீ சுமக்கமுடியும் மறுமையில் எனது பாவச்சுமையை நான்தான் சுமந்தாக வேண்டும் என்று கூறிய கலிஃபா உமர் அவர்களைப்போன்ற ஆட்சியைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்... மகாத்மா காந்தியடிகளும் எதிர்பார்த்தார்...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval