Thursday, April 21, 2016

அன்பு நண்பர்களே..



அரசியல் பின்னணியோ, பொருளாதார வலிமையோ, குடும்பப் பின்புலமோ எதுவுமில்லை எனக்கு. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக உரத்து முழங்குவது மட்டுமே எனது அடையாளம்.
பொதுக்கூட்டங்களில், போராட்டங்களில், ஊடகங்களில் ஒலித்த எனது குரல், சட்டப்பேரவையிலும் ஒலிக்க ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விசிக சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறேன். தலைவர் திருமாவளவன் அவர்களின் சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தை உள்ளடக்கிய தொகுதி. தலைவர் வென்ற சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி. தலைவர் போட்டியிட்டபோது 50,000 வாக்குகளுக்கு மேல் குன்னத்தில் வாங்கியிருக்கிறார்.
எனவே, வெற்றி வாய்ப்பு மிகமிக எளிதாக உள்ளது. ஆனால், களத்தை எதிர்கொள்ள பொருளாதாரம் மட்டுமே பெரும் தடையாக உள்ளது. பொருளியல் வலிமை கொண்ட பெரும் கட்சிகளோடு இந்த எளியவன் மோதப்போகிறேன். உங்கள் ஆதரவு மட்டுமே எனக்குள்ள ஒரே ஆறுதல். நீங்கள் அளிக்கும் உதவி ஒரே ஒரு ரூபாய் என்றாலும் அது இப்போது எனக்கு பேருதவிதான். உதவுங்கள் உறவுகளே!
அன்புடன்
ஆளூர் ஷா நவாஸ்
9884325998
எனது வங்கிக் கணக்கு எண்:
Mohamed Shanavas
A/c - 31487270541
State Bank of India
Chennai Egmore Branch
IFSE Code - SBIN0001516

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval