Wednesday, April 20, 2016

ஒரு நிமிடம் சிந்திப்பீர் சகோதரர்களே !

தர்மம் பண்ண 10 ரூபாய் பெரிது .
ஷாப்பிங் போக 100 ரூபா ரொம்ப சிறியது .
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பக்கம் திருக்குரான் ஓத அலுப்பு
100 பக்க வார இதழ் ரசனை .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 மணி நேர தராவீஹ் சலிப்பு
3 மணி நேர சினிமா விருவிருப்பு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்திரிக்கை செய்தியில் எந்த சந்தேகமுமில்லை.
இறை செய்தியில் அவ்வப்போது சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரார்த்தனையில் வார்த்தைகளின் தடுமாற்றம்.
புறம்பேசுகையில் ஒரு வார்த்தை கூட மறப்பதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொழுதுபோக்கைக் காண முதல் சீட்
தொழுகைக்கு வந்தால் கடைசி வரிசை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசியல்வாதியின் 1மணி நேர பிரசங்கம் சலிப்பேயில்லை .
இமாமின் 1/2 மணி நேர குத்பா உரை கசக்கிறது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval