சென்னை (05-04-16): இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவசமாக டிவி பார்ப்பதற்கு தூர்தர்ஷன் TV நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்களின் சேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும், இணைய வசதி இல்லாமல் டிவி சேனல்களை கண்டுகளிக்கும் வசதியை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது.
டி.டி.டி. (Digital Terrestrial Television Services) என கூறப்படும் இந்த வசதி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்பூர், இந்தூர், அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் ஆகிய 16 நகரங்களில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கப்பட்டது.
இந்த வசதியை பெற, ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பொருத்தி டிவி சேனல்களை பார்க்கலாம்.
இதற்காக உள்ள டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதற்கென பிரத்யேக ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் தளமிறக்கம் செய்து டி.டி சேனல்களின் சிக்னலை பெற்று டிவி சேனல்களை காணலாம்.
பணம் கொடுத்து டாங்கிள் மட்டும் வாங்கினால் போதும், இணைய வசதி தேவையில்லை. இந்த புதிய வசதி மூலமாக டி.டி. நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி கிசான் சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.பார்த்து ரசிக்கலாம்.

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval