Friday, April 29, 2016

'என்னாது...இந்தியாவுக்கு வரணுமா...அதெல்லாம் முடியாது' - மல்லையா!

லண்டன்: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, லண்டன் அருகே  பண்ணை வீட்டில் தங்கியுள்ள விஜய் மல்லையா, "இங்கிலாந்திலேயே தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால் இந்தியாவுக்கெல்லாம் வரமுடியாது"  என்று  ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியுள்ளார். 
     
மேலும் மல்லையா அளித்துள்ள பேட்டியில்," இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலையைப்  புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.இந்தியாவில் இருந்து நான் வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். மின்னணு ஊடகங்களில் பொதுமக்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். அது அரசை மிகப்பெரிய அளவிற்குக் கொண்டுசென்று அழித்துவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

என்னால் கடனாக வாங்கப்பட்ட பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை தணிக்கை செய்யவேண்டும். அவர்கள்  எதையும் கண்டுபிடிக்கப்போவது  கிடையாது என்பதை நான் நிச்சயமாக கூறமுடியும், ஏனென்றால் அதுவே உண்மை. கடன் கொடுத்த வங்கிகளுடன் நியாயமான தீர்வையே  நான் விரும்புகிறேன். என்னைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்வதாலோ அல்லது எனது பாஸ்போர்ட்டை முடக்குவதினாலோ என்னிடமிருந்து பணத்தைத் திரும்ப பெற முடியாது" என்று கூறியுள்ளார்.

பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று (வியாழன்)  வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் மல்லையா பேட்டியளித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval