ஆண்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சும் நேபாள நாட்டின் நீதிமன்றத்தில் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞராக சாதித்து வருகிறார் மொஹ்னா அன்சாரி.. கூடவே நேபாள அரசின் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்..
சாதாரண தச்சு வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மகளான மொஹ்னா வறுமை காரணமாக 2000 ல் பள்ளியிறுதி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
மூன்றாண்டுகளுக்கு பின் 2003 ல் ஒரு தொண்டு நிறுவனம் அளித்த உதவியுடன் படிப்பை பூர்த்தி செய்ததுடன் சட்டக்கல்லூரியில் மேற்படிப்பில் சேர்ந்து பயின்று நேபாள நாட்டின் முதல் முஸ்லிம் பெண் வழக்கறிஞர் என்ற பெருமை பெற்றுள்ளார்...

தனது கல்லூரி நாட்களில் சமூகத்தின் பல்வேறு விமர்சனங்களை சந்தித்ததாகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும், மனித உரிமைகள், மகளிர் நலன் சார்ந்த வழக்குகளில் முன்னுரிமை கொடுத்து பணிசெய்ய விரும்புவதாக கூறியுள்ளார் மொஹ்னா அன்சாரி...
Very interesting to read,I thought no Muslims live there.
ReplyDelete