மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தமாகா கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து அடுத்த நடவடிக்கையில் இறங்கிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சி நலன் கருதி ஓரிரு நாட்களில் கூட்டணி முடிவை அறிவிப்பதா கூறி இருந்தார்.
இந்நிலையில் பாஜகவுடன் தமாகா இணையலாம் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
சென்னையில் இன்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தமாகாவுடன் கூட்டணி தொடர்பாக பாஜக பேச்சு வார்த்தை நடந்தி வருவதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்தால் ஊழல் இல்லாத அரசை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
courtesy;kalaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval