சிரியாவின் எல்லைப் புறங்களில் துருக்கி நிறுத்தியிருக்கும் ராடார்களை சீர்குழைக்கும் முறைமையினால், ரஷ்யாவும் அமெரிக்காவும் இரவு நேரங்களில் விமானங்கள் பறப்பதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியத் தயாரிப்பான 'கவறால்' எனப்படும் இம்முறைமையினால் ரஷ்ய பாதுகாப்பு முறைமைகளையும் அதன் யுத்த விமானங்களையும் சீர்குழைக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இவை ராடார்களையும், ஏவுகணைகளின் இயக்கத்தையும், பீரங்கிக் குண்டுகளையும் 100 கிலோமீற்றர் தொலைவிலிருந்து சீர்குழைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய மூலோபாய பகுப்பாய்வாளர் பிஸ்தன்தீன் ஸைபூஃகூஃப், ரஷ்யாவின் எஸ் 100 ஏவுகணை முறைமைகளையும், பிராந்தியத்திலுள்ள அனைத்து இராணவ முறைமைகளையும் சீர்குழைக்கும் ஆற்றல் கொண்ட இம்முறைமை எம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைப் பயன்படுத்துவதிலிருந்து துருக்கியை தடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.
courtesy;unmaithedal
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval