இறைத்தூதர் நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை ஒப்பிட்டு பேசியதற்காக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாகராஜன், நபிகள் நாயகத்திற்கு அடுத்து கருணாநிதி தான் முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மத் யூசுப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை தொடர்புப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, வரும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் வரும் வியாழக்கிழமைக்குள் கருணாநிதி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக தலைமை அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம் எனவும் அவர் எச்சரித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval