கேரள மாநிலம் கொல்லத்தில் கோயில் திருவிழா ஒன்றில் நடந்த வெடி விபத்தில் 100க்கு மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 350 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருடைய நிலையும் மோசமாக உள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர் என அனைவரும் உட்படுவர். இவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்தனைகள்!
உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு அவசரத் தேவையாக பல யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி தெரிவித்துள்ளது. ஒரு உயிரைக் காப்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பதற்குச் சமமானது என்பது நபிகளின் அறிவுரை.
உயிருக்குப் போராடும் சகோதரர்களுக்கு இரத்தம் கொடுக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்:
04712528300, 04712528647
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval