ரயிலில் நான் கடந்த வியாழனன்று கவுகாத்தியில் இருந்து ஜார்கட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது பைஜாமா, குர்தா, வெள்ளை முடியுடன் ஒரு மனிதர் நான்கு பாதுகாவலர்களுடன் ரயிலில் ஏறினார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்தான் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற எந்தவித ஆடம்பரங்களும் இல்லாமல் மிகவும் எளிமையாக 4 பாதுகாவலர்களுடன் ரயிலில் தனக்கான இடத்தை தேடி அமர்ந்தார்.
அப்போது அவர் அருகில் சென்று பேச எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் அவரிடம் சென்ற போது சர்க்கார் தன் இருக்கையை விட்டு எழுந்து என்னிடம் சாதாரணமாக பேசி எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
என் வாழ்நாளில் இதுபோன்று எளிமையான அரசியல் வாதியை நான் பார்த்ததே இல்லை”
- பி.கோகய், ஜார்கட்.
(டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து...)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval