Saturday, April 16, 2016

ஜப்பானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


Tamil_News_large_1502548டோக்கியோ: ஜப்பானில் 24 மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.சுனாமி எச்சரிக்கையும்விடப்பட்டது.

ஜப்பானின் தென்மேற்கே உள்ள கியூஷு தீவில், நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி தொடர்ந்து 20 வினாடிகளுக்கு நீடித்த இந்த நிலநடுக்கத் தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 9 பேர் இறந்தனர். அதிவேக ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் சாலைகளில்
தங்கினர். கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஜப்பானின் குமமோட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் பவ்லேறு இடங்களில் வீடுகள் விரிசல்கள் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தையடுத்து குமமோட்டோ நகரில் வீடுகளில் தங்கியிருந்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனால் 24 மணி நேரத்தில் இரண்டுமுறை நிகழ்ந்த நிலநடுக்கம் அந்நாட்டினை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
courtesy;kalaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval