Wednesday, April 27, 2016

கொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்!


இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகளுக்கு எக்கச்சக்கமாக செலவிடுகின்றனர். உணவு வாயிலாக மட்டும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். பூண்டுதான் அந்த எளிய உணவு.
கொழுப்பை குறைப்பதில், பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல, பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள, கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு, நல்ல கொழுப்பு அதிகமாகும். இஞ்சி, உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம் கொழுப்பை கரைப்பதில் எக்ஸ்பர்ட்.
லவங்க மசாலா பட்டை, நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது. சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது. நிலக்கடலை, நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து, தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. கவளை மீன் எனப்படும், சாளை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா-3யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது. கறுப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது. சோயா, கோதுமை போன்ற தானியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால், ரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெட்ட கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டாணி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலஸ்டிராலைக் கரைக்கும்.
சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் 3 அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம். கொலாஸ்டிராலைக் குறைத்து, நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில், மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா- 3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள், 100 கிராம் மீனை உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள், மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.
தேங்காய் எண்ணெய், பாமாயிலால் சமைக்கக்கூடாது. தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

courtesy;unmaithedal

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval