Friday, July 31, 2015

மிரட்ட வரும் பேய் !? [ 4 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!

அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர்

ஒரு தலைவாின் இறப்பிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை


Mighty Line No Fires Permitted Floor Sign, NOFLAME24 NOFLAME24 முதன்முதலாக ஒரு தலைவாின் இறப்பிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையாக்கபடவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொதுவிடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்க்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை இதுதான் ஒரு தலைவா், மகத்தான மனிதருக்கு மக்கள் செலுத்தும் இறுதிமரியாதை என்பதை விட புகழஞ்சலி என்றுதான் கூறவேண்டும்.... வாழ்நாளில் எந்த தலைவருக்கும் தனிமனிதருக்கும் இதுவரை வழங்கப்படாத ஏன் இனிமேலும் இதுப்போல நடந்திராத அளவிற்க்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது....

Thursday, July 30, 2015

அணுசக்தி, விண்வெளி சாதனையில் அப்துல் கலாமால் இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்தது:


மனித ஆற்றலின் ஞானி நமது பாதுகாப்பு திட்டங்களின் கதாநாயகன் என்ற அடிப்படையில் அவர், அளவுகளை மாற்றினார். மனித ஆற்றலின் ஞானி என்ற முறையில் அவர், குறுகிய ஒருதலைசார்பு உணர்வுகளில் இருந்து உயர்ந்த நல்லிணக்க பாதைக்கு செல்லும் வகையில் கொள்கையை தளர்த்தவே அவர் விரும்பினார்.

5 வருடங்களுக்கு பின் உலகின் மிகப் பெரிய பூவான "டைடன் ஆரம்" டோக்கியோவில் மலர்ந்துள்ளது


உலகின் மிகப் பெரிய பூவான "டைடன் ஆரம்" ,டோக்கியோவில் உள்ள ஜிண்டாய் தாவரவியல் பூங்காவில் 5 வருடங்களுக்கு பின்னர் ,மலர்ந்துள்ளது.ஜிண்டாய் தாவரவியல் பூங்கா திறந்திருக்கும் நேரங்களில் இந்த பூவை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது.2 மீட்டர் ( 6.5 அடி) உயரத்தில் மிக பிரமாண்டமாக காட்சியளிக்கிறது "டைடன் ஆரம்".,

30/07/2015 இன்று முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம் ஜனாஸா சொந்த ஊர் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்.!

கடந்த 27/07/2015 திங்கட்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த முன்னால் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம் ஜனாஸா 30/07/2015 வியாழன் இன்று அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில்  அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டது. இந்தியா முழுவதிலிருந்தும்

Tuesday, July 28, 2015

நன்றி நண்பரே: மயங்கி விழுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக காவலருக்கு நன்றி கூறிய கலாம் அவர்களின் அன்புள்ளம்

நன்றி நண்பரே: மயங்கி விழுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக காவலருக்கு நன்றி கூறிய கலாம் அவர்களின் அன்புள்ளம்மேகாலயா மாநில மாணவர்களிடம் பேச வேண்டும் என்ற உற்சாகத்தில் நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அப்துல்கலாம் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஷில்லாங் செல்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு விமானத்தில் சென்ற கலாம் பிறகு அங்கிருந்து காரில் ஷில்லாங் சென்றார். 122 கிலோ மீட்டர் தூர பயணத்தை அவர் காரிலேயே மேற்கொண்டார்.

சமூக தளத்தில் வெளியான மறைந்த மாமேதை டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் அரியவகை புகைப்படத் தொகுப்பு.!

கடந்த 27/07/2015 திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம். மேகாலய மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த   நிகழ்ச்சி ஒன்றில்  மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஷில்லாங் நகரில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி காலமானார்.

“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்


[7/27, 7:45 PM] Fn: மேகாலயா: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது.

Monday, July 27, 2015

தமிழக வளர்ச்சிக்கு வழிகோலும் கனவு புத்தகத்தை எழுதி நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல்கலாம்


தமிழக வளர்ச்சிக்கு வழிகோலும் கனவு புத்தகத்தை எழுதி நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல்கலாம்"எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்" என்ற தலைப்பில் எழுதிவந்த புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் !

ராமேஸ்வரத்தை சேர்ந்த மர்ஹும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகனும்  ஏ.பீ.ஜெ.முத்துமீரா மரைக்காயர் அவர்களின் சகோதரருமான முன்னாள் ஜனாதிபதி ஜனாப் ஏ.பீ.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு வஃபாதானார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மரண அறிவிப்பு!

அஸ்ஸலால்மு அலைக்கும் 

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கா காதர் பக்கீர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா நெய்னா முஹம்மது, மர்ஹூம் மு.கா. அப்துல் ஜப்பார், மு.கா இப்ராஹீம்ஷா, மர்ஹூம் மு.கா கமால் பாட்சா, மர்ஹூம் மு.கா. முஹம்மது புஹாரி ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மு. முகம்மது இப்ராஹீம், மு. பகுருதீன் ஆகியோரின் தகப்பனாரும்,

ஆண்டியானாலும் அரசனாக இருந்தாலும் படைத்தவன் முன் அனைவரும் சமம்

தி௫ ஜவஹர்லால் நே௫ பிரதமராக இ௫ந்த காலகட்டத்தில் இரண்டு நாள் அரச முறை பயணமாக இந்தியா வந்த சௌதி அரேபியா நாட்டு மன்னர் வெள்ளி கிழமை தொழுவதற்க்காக பாதுகாப்பு படையினரால் பள்ளிவாசல் (மஜ்ஜித்) அழைத்து செல்லப்பட்டார்

Sunday, July 26, 2015

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

புரூணை சுல்தானிடம்.!




புரூணை சுல்தானிடம் 7000 கார்கள்..!! அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்கள் – மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம்
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார்.

உங்கள் கிராமத்தை பராமரித்து தருகின்றோம்


உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை 7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.

நண்பர்களே எச்சரிக்கை!!! நெஞ்சில் முள் குத்தியது !


சகோதர,, சகோரதிரிகளே,, தயவு செய்து அலட்சியம் வேண்டாம்...
உங்கள் குழந்தைகளை படுக்க வைக்கும் முன் அந்த இடத்தை நன்றாக பார்த்த பின்பு படுக்க வையுங்கள்.இங்கு வழிகின்றது இங்கு எரிகின்றது என்று சொல்ல நம்மால் தான் முடியும் இது போன்று பேச தெரியாத மழலை முகம் மாறாத இந்த பிஞ்சு என்ன செய்ய முடியும்,அது துடிப்பதை பார்த்துவிட்டு நம்மால் என்னதான் செய்து விட முடியும்.

என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்.!

தன்னை ஒரு நிமிடம் எண்ணிப்பார்
உன்னைக் கவர்ந்த ஒவ்வொன்றும்
உனக்கெதிராய் சாட்சி சொல்லும்

Saturday, July 25, 2015

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...

ஒரு_மருத்துவர்‬, நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

ட்ரை ஸ்கின் பிரச்சனை

    ன் அப்பாவிற்கு வயது காரணம் காலில் ட்ரை ஸ்கின் பிரச்சனை வந்தது, குடும்ப மருத்துவரோ, பிண்டத் தைலம் போல ஆயுர்வேத, சித்தா எண்ணெய்கள் தடவிக்கொள்ளுங்கள், கடையில் விற்கும் மாய்ஸ்ரைச்சர்கள், க்ரீம்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
சித்தா, ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் நவீன மருந்துகளுக்கு மாற்று என்று போனால், அவை படு பயங்கர விலைகளில் விற்கப்படுவது அப்பொழுதுதான் தெரிகிறது.

மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கினால் அரசுக்கு ரூ.260 கோடி இழப்பு

parliamentநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களால் முடக்கப்பட்டு வருகிறது. கூட்டத் தொடர் முழுவதும் இவ்வாறு செயல்படாமல் போனால் அரசுக்கு சுமார் ரூ.260 கோடி இழப்பு ஏற்படும் என தெரிகிறது. லோக்சபா, ராஜ்யசபா ஆகியவற்றை ஒரு மணிநேரம் கூட்டுவதற்கு தலா சுமார் ரூ.1.5 கோடி செலவாகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே அமளி ஏற்பட்டது.

முருங்கையின் அதிசயம்.!

drumstick-treeமுருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
‘ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது.

Friday, July 24, 2015

மிரட்ட வரும் பேய் !? [ 3 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!



நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு சிலர் சில விபரீத நிகழ்வுகளிலோ அசம்பாவிதங்களிலோ திகில் சம்பவங்களிலோ பட்டு அனுபவித்து திருந்திவிடுவதும் உண்டு.அதைப்பற்றியே இந்த வாரம்...

Thursday, July 23, 2015

நியூ யார்க் டைம்ஸ் தலைப்புச் செய்தியில் வந்த பழம்பெரும் குர்ஆன் செய்தி

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருந்து மாத்திரைகளை மறந்து வந்த பயணிக்காக விமானத்தை மீண்டும் தரை இறக்கி மனித நேயத்திற்கு புதிய வரலாற்றை எழுதிய முஸ்லிம் விமானி யூசுப் சேர்.!!

சவுதி அரேபியாவின் ஹயில் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி யூசுப் சேர் தரை இறக்கினார்

விமானத்தில் பயணம் செய்த 17 வயது இளைஞர் ஒருவர் புற்று நோயால் பாதிக்க
ப்பட்டவர்.

Wednesday, July 22, 2015

கலிபோர்னியாவில் மந்தி விருந்து


அமெரிக்காவின் கலிபோர்னியாவில்நமது அதிரையர்கள் நோன்பு பெருநாளை விமர்சையாக கொண்டாடினர் அதன்பின்  மந்தி விருந்தும் 
நடைபெற்றது அதில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tuesday, July 21, 2015

இது தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்


இஸ்லாத்தின் மாண்புகளை உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு நெஞ்சை நெகிழ செய்த சுவாரஷ்யமான சம்பவம் நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அதிரை லயன்ஸ் கிளப் சார்பாக பள்ளியளவில் முதலிடம் வந்த மாணவ மாணவியர் பாராட்டி கௌரவிப்பு.!

21/07/2015 இன்று அதிரை சாரா கல்யாண மண்டபத்தில் 2015 / 16 க்கான அதிரை லயன்ஸ் கிளப் புதிய   நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி விமரிசையாக  நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியின்போது கடந்த கல்வியாண்டில்  பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அரசு

Monday, July 20, 2015

இன்றைய கதாநாயகன் " ஆஷிஷ் சதுர்வேதி ".



இவர்தான் மத்திய பிரதேசத்தின் ஆட்சியாளர்களையும், ஆளுநரையும், அதிகார வர்கத்தையும் ஆட்டிப் படைக்கும் இன்றைய கதாநாயகன் " ஆஷிஷ் சதுர்வேதி ".
‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள்.

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?

இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை
ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை
பகிர்ந்து கொள்கிறேன்-
இனிமேல் யாரும்
இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்
இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல்
முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும்
முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி
விடுவார்கள்.

மரண அறிவிப்பு !


ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது உமர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்  அன்சாரி, முகம்மது இலியாஸ் ஆகியோரின் சகோதரியும், அகமது அலி, முகம்மது ஹசன் ஆகியோரின் மாமியாரும், முகம்மது அபூபக்கர்,  அகமது ஹாஜி, செய்யது முகம்மது புஹாரி , தாஜுதீன், அபுல் ஹசன் சாதுலி  ஆகியோரின் தாயாருமாகிய  இஸ்மாயில் நாச்சியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

Sunday, July 19, 2015

உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!!


மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்

Narasimha Rao 9th Prime Minister Of India

Narasimha Rao first asked to prepare for nuke tests : Kalam1996... ஒரு நாள் ராத்திரி 9 மணி.. அப்துல் கலாம் அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு.. பதறி அடிச்சிட்டு ஓடி இருக்காரு திரு. கலாம்..

நரசிம்ம ராவ்: பொக்ரான்-2 எல்லாம் ரெடி ஆயிடுச்சா??

கலாம்: தயார் நிலையில் இருக்கிறது

Saturday, July 18, 2015

பாரசீகம் (ஈரான்) இஸ்லாமிய உலகுக்கு வழங்கிய அருட்கொடைகள்.


அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாம் ஒருமுறை ரசூலுல்லாஹ்வுடன் (ஸல்) அமர்ந்திருந்த சமயம் அன்னாருக்கு சூரா ஜும்'ஆ அருளப்பட்டது. அதில் " இன்னும் இணையாதிருப்பவர்களுக்கு" என்ற வசனம் எமக்கு ஓதிக் காண்பித்த போது நான் "யார் அவர்கள்" என்று இரண்டு, மூன்று முறை வினவினேன். சிறிது நேரம் பதில் சொல்லாதிருந்த ரசூலுல்லாஹ் (ஸல்), பிறகு, எம் மத்தியில் இருந்த சல்மான் பாரிஸி (ரழி) மீது தம் கரத்தை வைத்து "இவரின் சந்ததியில் இருந்து ஒருவரோ அல்லது சிலரோ, விசுவாசம் (ஈமான்) துறையா என்ற நட்சத்திரத்தின் அருகில் இருப்பினும் அதனை அடைந்து கொள்வர்" என்று குறிப்பிட்டார்கள்.

காமன்வெல்த் செஸ் போட்டியில் பட்டுக்கோட்டை மாணவர் சாதனை

காமன்வெல்த் செஸ் போட்டியில்
வெள்ளிப்பதக்கம் வென்று
பட்டுக்கோட்டை மாணவர் சாதனை
, : டெல்லியில் 11
நாடுகள் கலந்து கொண்ட
காமன்வெல்த் செஸ் போட்டியில்
இந்தியா சார்பில் பங்கேற்ற
பட்டுக்கோட்டை பள்ளி மாணவர் 16
வயதுக்குட்டோர் பிரிவில்

எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

சீன அரசின் அடக்குமுறைகளையும் கடந்து பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சம் சீன முஸ்லிம்கள் ஓர் இடத்தில் திரண்டனர


சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர்

சீனாவின் மேர்க்கு பகுதியில் அமைந்துள்ள தஷன்ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம் தான் அது

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!
Various nibbles, Udumalaipettai, Tamil Nadu, Tamilnadu, South India ...
திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்

Friday, July 17, 2015

அதிரையில் இன்று E.C.R.சாலையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

இன்று      18/07/2015     சனிக்கிழமை காலை        அஸ்ரப்தீன் பிர்தவ்சி 
 பயானுடன் நோன்புப் பெருநாள் தொழுகை E.C.R.சாலையில் உள்ள   தவ்ஹீது பள்ளி  வளாஹத்தில்  அதிரையர்கள் திரளாக வந்து தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

இன்று 18/07/2015 சனிக்கிழமை இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில்  அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு  தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கனடா டொராண்டோவில் நோன்புப்பெருநாள் தொழுகை சந்திப்பு !

PHOTO COURTESY OF MUSLIM ASSOCIATION OF CANADA // The GTA Eid Festival, held at the Metro Toronto Convention Centre, hosted a bazaar, a carnival, and prayers.
        
  கனடா டொராண்டோவில்  வாழும் முஸ்லீம்கள் metro convention centerல்    இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளை  சிறப்பாக கொண்டாடினர் .பெருநாள் தொழுகையில்   ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன்  பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]


அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதிகமான எகிப்தியர்கள் ,

மிரட்ட வரும் பேய் !? [ 2 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!


து ஒரு மாலை நேரம்...

பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இருவர்கள் சேர்ந்து கால்நடையாக பொழுது போக்கிற்காக அந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்து செல்கிறார்கள். இருவரும் வகுப்பில் நடந்த பல சுவராஸ்யமான நிகழ்வுகளையும், படிப்பைப்

Thursday, July 16, 2015

துபாய் ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமீரகம் துபையில் இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. டேரா துபை ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அனைவருக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .!

இப்புனித மிகு நோன்புப் பெருநாளை இனிதாய் கொண்டாடவிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய  நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com 
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா

அமீரகத்தில் நோன்புபெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!

அமீரகத்தில் உள்ள மாநிலம் வாரியாக நோன்புபெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழுகை நேரத்தை பார்த்து பின்பற்றிக் கொள்ளவும்.

அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்!

6130936586_6ff2f4fd49_z.jpgதாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழவிடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன?

டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியில் இன்முகத்தோடு இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் கிருத்துவ சகோதிரி

... laws against hijab what are they afraid of muslim woman in hijabஇந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் கலாச்சரத்தில் வளர்ந்தவள் நான் நான் இஸ்லாத்தை பற்றிய அனைத்து விசயங்களையும் நம்புகிறேன் மேலும் இது தொடர்ப்பாக உங்கள் உதவியை நாடுகிறேன் என்று ஒரு கிருத்துவ சகோதிரி டாக்கடர் ஜாஹிர் நாயக்கிடம் வின தொடுக்கிறார்
இன்முகத்தோடு அவர் தொடுக்கும் வினாவில் தெளிவில்லாமல் இருப்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் எழுந்து வந்து

Tuesday, July 14, 2015

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல .
இருப்பதைக்கொண்டு நிறைவாய் வாழ மனதை பக்குவப்படுத்திக் கொள்வது!
அது ஒவ்வொருவர் மனம் சார்ந்த விஷயமே!
நம்மை சுற்றி என்ன உள்ளதோ ,
நமக்கு என்ன கிடைக்கிறதோ அதையே தமக்கு கிடைத்தது ஒப்பற்றது என மனதை நினைக்கும்படி செய்தாலே போதும் ,
சந்தோஷம் நம்மை தேடி வரும்.

அவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? - பல்கீஸ் பானு!

2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மறக்க முடியாத பெயர் பல்கீஸ் பானு.கொடூரமாக தாக்குதல் நடத்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் பல்கீஸ் பானுவின் கண் முன்னால் வைத்து அவரது தாயார், மகள் உள்பட 14 பேரை கொலைச் செய்தனர்.பெண்களை கொடூரமாக வன்கொடுமைச் செய்து கொலைச் செய்தனர்.எழுந்து நடக்க கூட இயலாதபோதும் இச்சம்பவங்களை குறித்து புகார் அளிக்க பல்கீஸ் பானு தைரியம் காட்டினார்.குற்றவாளிகளுக்கு 2008-ஆம் ஆண்டு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பா.ஜ.க தலைவர் சைலேஷ் பட் உள்பட 12 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்தது.

பேரிச்சம் பழம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
உலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன.
பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது.
அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....

முதலில் HRD பண்ண வேண்டும்...இது எவ்வாறு இலகுவாக செய்ய வேண்டும் என்று நான் ஏற்கனவே முக நூலில் தெரிவித்து இருந்தேன்..
HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..அல்ஹம்து லில்லாஹ்!
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)

உண்மையான நேர்மையான ஹீரோக்கள்

திரு.சுதாகர் IPS ( புளியந்தோப்பு DCP) அவர்களது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரயில் பயணிகள் போல் வேடமிட்டு 
மிகுந்த சிரமங்களைக் கடந்து சிறுவனைக் கடத்திய இளைஞனைப் பிடித்தனர்.
இந்தத் தனிப்படையில் திரு.ஜெயக்குமார் DCP ( Crime Branch) அவர்களும் திரு.மயில்வாகனன் DCP ( அம்பத்தூர்) அவர்களும் அடங்குவர்.
ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.
இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான வீரர்களைக் கொண்டாடுவோம்.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.காவலர்கள் இல்லையெனில் நாம் கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட காப்பாற்றிக் கொள்ள இயலாது நம்மால்..